பெரம்பலுார் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டணையும், ரூ. ஆயிரம் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
பெரம்பலுார் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சசிக்குமார்,32. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நடராஜன்,(58) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஏப்., 23ம் தேதி நடராஜனின் வீட்டின் முன்பு கொட்டப்பட்டிருந்த மணலில் சசிக்குமாரின் குழந்தை முகேஷ்குமார் விளையாடியதால் நடராஜன், சசிக்குமாரை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜன், சசிக்குமாரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த சசிக்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
இது பெரம்பலுார் போலீஸார் வழக்கு பதிந்து, பெரம்பலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி நசிமாபானு இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றவாளி நடராஜனுக்கு ஆயுள் தண்டணையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் குற்றவாளி நடராஜனை போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.