Perambalur: A resolution passed during the VCK’s Verkalai (Makkalai) Thedi journey, demanding the removal of encroachments!

பெரம்பலூர் மாவட்டம், திருவாளந்துறை ராம்ஜி நகரில் வேர்களைத் (மக்களை) தேடி பயணம் விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், திருவாளந்துறை ராம்ஜி நகரில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க வேண்டும், அரசு பேருந்து வசதியை அதிகப்படுத்த வேண்டும், கருங்குளத்தை அளந்து ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும், விளையாட்டு மைதானத்தை சீரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டூ வர வேண்டும், சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், உயர் கோபுர மின் விளக்கு, கை அடிபம்புகளை சீர் செய்து தர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிளை செயலாளர் சிவசெல்வம் கிளை பொருளாளர் கொளஞ்சி, துணை கிளைச் செயலாளர்கள் மணிகண்டன், இராஜேந்திரன், இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை கிளைச் செயலாளர் வடிவேல் வளவன், கிளை பொருளாளர் செல்வகுமார், கிளை துணை செயலாளர்கள் சூர்யமூர்தி, வீரமணி மற்றும் மகளிர் விடுதலை இயக்கத்தின் கிளை செயலாளர் கஸ்தூரி , பொருளாளர் சுகுணா, துணை கிளை செயலாளர்கள் அனுசியா, இரஞ்சிதா, அருள்மணி ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் செயற்குழு உறுப்பினர்களாக பெரியசாமி, செந்தில்குமார், சதீஷ்குமார், முத்துகுமார், குமரேசன், ரமேஷ், , இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை செயற்குழு உறுப்பினர்களாக வேல்முருகன், கரண், திலீப், மாரிமுத்து, காமேந்திரன், பாரத், குமார், தங்கபிரகாஷ், அரவிந்த், அழகு துரை, சக்திவேல், சின்னசாமி, ராஜேஷ்குமார், மகளிர் விடுதலை இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக தேன்மொழி, புஷ்பா, ஜனனி, மாரியம்மாள், தனலெட்சுமி, விரோனிகா, அஞ்சலை, ஜெயா, அஞ்சலை ஆகியோர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.

மாநில துணைச் செயலாளர் கராத்தே.பெரியசாமி, ஒன்றிய செயலாளர் இடி முழக்கம், மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து, மாவட்ட அமைப்பாளர் அய்யம்பெருமாள், மாவட்டம் துணை அமைப்பாளர் ராமர், சையது அலி, அப்துல் ஹக்கீம், அஞ்சேன் முகமது மற்றும் மதியழகன், இராமு, செல்வராஜ் உள்ளிட்ட முகாம் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!