Perambalur: A resolution was passed at the district conference of the Federation of Revenue Associations demanding that vacancies at all levels be filled on regular wages!
பெரம்பலூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கை மாவட்ட மாநாடு இன்று மாவட்ட தலைவர் பாரதிவளவன் தலைமையில் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் கதிர், செந்தமிழ்செல்வன், காந்தி, மாசந்திரன், பிரேம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டதாரி- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மகேந்திரன் மாநாட்டை தொடங்கிவைத்து பேசினார். தாசில்தார்கள் பாலசுப்ரமணியன், முத்துகுமரன், துரைராஜ், சின்னதுரை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ராஜகேசவன்,நல்லுசாமி, பாலச்சந்திரன், குமரிஅனந்தன், சரவணசாமி, சுப்ரமணியன், கருணாகரன் உட்பட பலர் பேசினர். சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுசெயலாளர் ஜபருல்லா கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார்.
மாநாட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்துவரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணிப்பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும். பொதுமக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.
அதீதமான பணி நெருக்கடிகளை ஏற்படுத்துவது, களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்டம ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
அரசுப் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படை பணி நியமனத்திற்கு உச்ச வரம்பு 5% என குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, ஏற்கனவே இருந்ததைப் போன்று 25% ஆக நிர்ணயம் செய்திட வேண்டும். பணியில் மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்கிட வேண்டும்.
அனைத்து நிலைகளிலும் வெளிமுகமை, ஒப்பந்தம், தற்காலிகம் மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனங்களை முழுமையாக கைவிட்டு, அனைத்து பணியிடங்களையும் நிரந்த அடிப்படையில் நிரப்பிட வேண்டும். ஆண்டுதோறும் ஜூலை 1ம் நாளை வருவாய்த்துறை தினமாக அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் அருளானந்தம் நன்றி கூறினார்.