Perambalur: Aadhaar special camp for underprivileged children; Legal Services Commission announcement!
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பத்மநாபன் தலைமையில் வரும் 25-08-2025 திங்கள் கிழமை காலை 10.00 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், ஆதவரற்ற குழந்கைளுக்கு ஆதார் தொடர்பான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.