பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மருத்துவர்கள் அணி சார்பாக இன்று புதிய பேருந்து நிலையத்தில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமை மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
இதில் கட்சி பிரமுகர்கள் மாவட்ட இளைஞர் இளைஞிகள் பாசறைத் தலைவர் செல்வக்குமார், நகராட்சித் தலைவர் ரமேஷ் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகார்கள் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர். அருணாசலம், எம்.என்.ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், நகர பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், மற்றும் வழக்கறிஞர் கனகராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமிற்காக ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர், மருத்தவ அணித் தலைவர் அர்ஜுனன், செயலாளர் சுந்தரம், துணைச் செயலாளர்கள் ஆனந்தமூர்த்தி, ஆறுமுகம் அணி உறுப்பினர் சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டது. நோய்களுக்ககான ஆலோசனைகளையும், தீர்வுகளையும் முகாமில் தெரிவித்தனர்.