Perambalur AIADMK Cadres, on the one group idols flares! Fire crack on the other group
பெரம்பலூர் அஇஅதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரனை இன்று டி.டி.வி தினகரன் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிதாக அம்மா பேரவை மாவட்ட செயலாளராக இருந்த கார்த்தியேனை மாவட்ட செயலாளராகவும், பெரம்பலூர் முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷை அம்மா பேரவை மாவட்ட செயலாளராக நியமனம் செய்துள்ள இன்று அறிவிப்பு வெளியானது.
இதனைக் கண்டித்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அணியை சேர்ந்த ஆர்.டி.ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை பின்புறம் சசிகலா மற்றும் தினகரனின் கொடும்பாவியை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததுடன், முழக்கமிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கொடும்பாவியை எரிவதை தடுத்ததுடன் அவர்களையும் கலைந்து போகக செய்தனர்.
இதனால், அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதே போன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட பெரம்பலூர் நகராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் தனது ஆதரவாளர்களுடன் சென்று பட்டாசு வெடித்து கொண்டாடினார். பின்னர், அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
இதே போன்று தமிழகம் முழுவதும் ஒரு புறம் கொடும்பாவி கொளுத்துவதும், மறுபுறம் பட்டாசு வெடித்து கொண்டாடுவதும் அரங்கேறி வருகிறது.
உண்மையாக அதிமுக யார் என பொதுமக்கள் குழம்பி உள்ளனர்.
மேலும், கடந்த காலத்தில் நடந்த ஜெ.அணி (ஜெயலலிதா), ஜா அணி (ஜானகி ) செய்ததை காணத இளம் தலைமுறையினருக்கு அப்படியே காணும் வகையில் அமைந்துள்ளது.
காலம் பதில் சொல்லும்…..!