Perambalur: AIADMK’s 54th anniversary inauguration: Volunteer celebration led by District Secretary R. Tamilselvan!
பெரம்பலூரில் இன்றைய நாளில் அதிமுக எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு 53 ஆண்டுகள் நிறைவு செய்த 54ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெரியார், அண்ணா, MGR, ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.தமிழ்ச்செல்வன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பொங்கல், குஸ்கா, தயிர்சாதம் வழங்கினர்.
இதில், முன்னாள் துணைசபாநாயகர் வரகூர் ஆ.அருணாசலம், முன்னாள் எம்.பிக்கள் சந்திரகாசி, மருதைராஜா, அனைத்துலக MGR மன்ற செயலாளர் சித்தளி நாகராஜன், மாவட்ட அவைத்தலைவர் குன்னம் குணசீலன், மாவட்ட MGR மன்ற செயலாளர் MN ராஜாராம், மாவட்ட இணை செயலாளர் தழுதாழை ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், சசிக்குமார், ரவிச்சந்திரன், ராஜேந்திரன், உதயம் ரமேஷ்,செல்வமணி, ராமராஜ், புஷ்பராஜ், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கணேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி, மாவட்ட மீனவரணி செயலாளர் முருகேசன்,மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர் வெங்கலம் தேவராஜன், பேரூர் செயலாளர் குரும்பலூர் செந்தில்குமார், பாளையம் சரவணன், முன்னாள் வேப்பூர் சேர்மன் கிருஷ்ணகுமார், சித்தளி கணேசன், விளாத்தூர் சிதம்பரம், லாடபுரம் கருணைராஜா, தடா.பெரியசாமி உள்ளிட்ட பல மாநில, மாவட்ட, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அன்னதானம் வழங்கிய போது பொதுமக்களுக்கு சாதங்கள் பெற தட்டுக்கள் இல்லாததால் சுமார் 5 நிமிடத்திற்கு மேலாக கரண்டியை கையில் வைத்துக் கொண்டு அதிமுக நிர்வாகிகள் அமைதியாக அண்டாக்கள் அருகில் காத்திருந்தனர். பின்னர், தட்டுக்கள் வந்த பின்னர் உணவுகளை வழங்கினர்.