Perambalur: Alathur ITI students topped the All India Examination; received congratulations from the Collector!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அகில இந்திய தேர்வில் இந்திய அளவில்  முதலிடம் பெற்ற ஆலத்தூர் ஐ.டி.ஐ படிக்கும் மாணவி மற்றும் 2 மாணவர்கள் கலெக்டர் ந.மிருணாளினியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கம்மியர் மின்சார வாகன தொழில் பிரிவு பயின்று வரும் கார்த்திகா, சோலார் டெக்னீசியன் (எலக்ட்ரிகல்) தொழில் பிரிவில் பயின்று வரும் நந்தகுமார், அட்வான்ஸ் சி.என்.சி மெஷினிங் டெக்னீசியன் தொழிற்பிரிவில் பயின்று வரும் ராஜ்குமார் ஆகியோர் அகில இந்திய அளவில் நடைபெற்ற தொழிற் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதற்கா கடந்த 4.10.2025 அன்று டெல்லியில் நடந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பயிற்சியாளர் கார்த்திகா பாராட்டுச் சான்றிதழை பெற்றார். இதேபோல அகில இந்திய அளவில் தொழிற் தேர்வில் முதலிடம் பெற்றமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கார்த்திகா, நந்தகுமார் மற்றும் ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் 6.10.2025 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். சந்தித்த மாணவ மாணவிகள் தாங்கள் பெற்ற சான்றிதழ்களை கலெக்டரை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

விழுப்புரம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் பரமேஸ்வரி, ஆலத்தூர் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் முத்துக்குமரன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக பயிற்சி அலுவலர் சீனிவாசன், ஆலத்தூர் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர் தெய்வராஜா, பயிற்றுநர்கள் ரவி, ருத்ரமூர்த்தி, தேன்மொழி மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!