Perambalur: Illegal production at MRF tire factory; Indian Trade Union Center complains to Collector!

பெரம்பலூர் MRF டயர் தொழிற்சாலையில் நடைபெறும் சட்டவிரத உற்பத்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி இந்திய தொழிற்சங்க மையத்தினர் கலெக்டர் மிருணாளினியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம், விஜயகோபாலபுரத்தில், இயங்கி வரும் MRF Ltd டயர் (TCR மற்றும் TCC) தொழிற்சாலையில் தொழிற்சாலை சட்டங்களுக்கு எதிராக டயர் உற்பத்தி செய்யும் அனைத்து பிரிவுகளிலும் நேரடி உற்பத்தி பகுதிகளில் தொழிற்சாலை சட்டங்களுக்கு எதிராக பல்வகை நிரந்தரமற்ற தொழிலாளிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளிகளை பணி அமாத்தி சட்டவிரோத உற்பத்தியில் இந்த நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொழிற்சாலைக்குள் பணியிடை விபத்துகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. சட்ட விரோத உற்பத்திக்கு எதிராக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் கூட்டாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர். CITU மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கருணாநிதி, குணசேகரன், பன்னீர்செல்வம் , ரெங்கராஜ் ஆகியோர்கள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!