Perambalur: Dependant Certificates for Families of Ex-Servicemen — Collector Informs!

முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களின் சிறார்களுக்கு பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பட்டய மேற்படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் கல்வி சேர்க்கைக்காக முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்களின் சிறார்களுக்கு, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் “சார்ந்தோர் சான்று“ வழங்கப்பட்டு வருகிறது. சான்றை பெற, முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, சிறார்களின் பள்ளி இறுதிச் சான்று, மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம் இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவு எண் நகல் ஆகியவற்றுடன் வர வேண்டும்.
மேலும் வெள்ளைதாளில் முன்னாள் படைவீரரின் மனு மற்றும் படைப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட பப்ளிகேஷன் பார்ட் டூ ஆணை ஆகியவற்றுடன் முன்னாள் படைவீரர் சான்று பெற வேண்டி மகன் அல்லது மகளுடன் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி சார்ந்தோர் சான்று பெற்று இட ஒதுக்கீட்டின்படி விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும், விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் நேரில் அணுகி பயன்பெறலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497