Perambalur: Two Youths Arrested for Street Robbery!

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பெட்ரோல் பங்க் அருகே வாலிகண்டபுரம் சேர்ந்த கருப்பையா என்பவர் பைக்கில் கடந்த சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி வழிப்பறிக் கொள்ளையில் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பெட்ரோல் பங்க் அருகே கடந்த மே-6ம் தேதி இரவு வாலிகண்டபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கருப்பையா என்பவர் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூரில் இருந்து வாலிகண்டபுரம் சென்று கொண்டிருந்த போது தண்ணீர் பந்தல் எஸ் ஆர் பெட்ரோல் பங்க் முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்த 3 நபர்கள் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி கருப்பையா வைத்திருந்த செல்போன் மற்றும் ரொக்கம் ரூ. 1300 மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து பாதிக்பட்ட கருப்பையா உடனாடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட பெரம்பலூர் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கோனேரிபாளையத்தைச் சேர்ந்த அன்வர் மகன் இப்ராஹிம் (19) என்பவரும் அய்யலூர் கிராமத்தைச் சார்ந்த சுப்பிரமணியன் மகன் ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் இந்த வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை விசாரணையில் தெரிய வந்த நிலையில் அவர்களை தேடி வந்த போலீசார் நேற்றிரவு அவர்களை கைது செய்து விசாரணை செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், பைக்கை பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டதால் நடுக்காட்டில் மறைத்து வைத்திருந்தனர். அதையும் பறிமுதல் செய்த பெரம்பலூர் போலீசார் இன்று பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில், போலீசார் இருவரையும் பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!