Perambalur: Uppodai Arulmigu Nagamuthumariamman Chithirai Grand Festival!

பெரம்பலூர் நகரில் எளம்பலூர் ரோடு உப்போடையில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு நாகமுத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்மிகு செல்வகணபதி, அருள்மிகு பாலமுருகன், ஸ்ரீ முனிஷ்வரன், அருள்மிகு எல்லை கருப்புசாமி ஆகிய தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா நடைபெறும். இத்திருவிழா சித்திரை மாதம் 18ம் நாள் முகூர்த்த கால் நடுதல், சித்திரை மாதம் 25ம் நாள் சக்தி அழைத்தல், சித்திரை மாதம் 26ம் நாள் பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்துதல், அன்னதானம், அம்மன் வீதி உலா வருதல், வான வேடிக்கையுடன் நடைபெறும். அடுத்த நாள் சித்திரை மாதம் 27ம் தேதி மாவிளக்கு பூஜை மற்றும் அம்மன் பல்லாக்கில் வீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா வானவேடிக்கையுடன் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெறுமாறு கோயில் நிர்வாகிகள் மற்றும் உப்போடை கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!