Perambalur: A free medical camp for abdominal pain is being held at Arputha Hospital until June 30! Dr. Samuel Devakumar shares the information.

பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள அற்புதா மருத்துவமனையில் மே மாதம் முதல் வரும் ஜுன்.30 வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை வயிற்று வலிக்கான இலவச மருத்துவ முகாம் நடந்து வருவதாக மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சாமுவேல் தேவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்தாவது:
பெரம்பலூரில் கடந்த 22 வருடங்களாக மருத்துவ சேவை செய்து வரும் அற்புதா மருத்துவமனை மக்களுடன் மக்களாக சேவை செய்து வருகிறது. வயிறே நலமா! என்ற பெயரில் நடக்கும் இம்முகாமில், வயிற்று வலி, சாப்பிட்டவுடன் வாந்தி எடுத்தல் அல்லது உணர்வு, வயிறு உப்புசம், கொஞ்சம் சாப்பிட்டவுடன் நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வு, வயிற்றில் பந்து உருளுவது போன்ற உணர்வு, உணவு விழுங்குவதில் அடைப்பு, ரத்த வாந்தி, நெஞ்சு எரிச்சல், புளிச்ச ஏப்பம் போன்ற அறிகுறிகள் இருந்தால் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், உணவு குழாய் அடைப்பிற்கான சிகிச்சை, வயிற்றுப் புண், சிறுகுடல் புண், இரைப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை, கணைய உறுப்பின் பிரச்சனைகளுக்கான சிகிச்சை, பித்தப்பை கற்கள் சிகிச்சை, பித்த நீர்ப்பாதை கற்களுக்கான சிகிச்சைகள் குறித்து ஆலோசனைகளும் அளிக்கப்படுதாகவும் தெரிவித்த அவர், பொதுமக்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு தெரிவித்துள்ளார். முன்பதிவிற்கு, அற்புதா மருத்துவமனைக்கு நேரிலோ அல்லது 99948 98026, 88704 71932 88704 71934 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497