Perambalur: Video of a bribe being accepted to grant permission for the free extraction of silt goes viral on social media!

இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க ஆலத்தூர் தாலுகா அலுவலக அலுவலர் ரூ.10,000 லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட நொச்சிகுளம், ஜெமீன் பேரையூர், புஜங்கராயநல்லூர், கொட்டரை, இலுப்பைக்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களின் வளத்தை அதிகரிக்கும் வகையில் வண்டல் மண் எடுப்பதற்கு தமிழக அரசு இலவசமாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இருப்பினும் வண்டல் மண் எடுப்பதற்கான இணையதள விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கும் பணியில் ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம் பெறப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை நிரூபிக்கும் வகையில் ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பதிவு அறையில் பணிபுரியும் ஒருவர், வண்டல் மண் எடுக்க அனுமதி பெற வந்தவர்களிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அலுவலகத்திலேயே பணத்தை வாங்கி எண்ணும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ வைரலாகி வருவது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497