Perambalur: Yoga Day at Almighty Vidyalaya Public School, Siruvachur!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி சேர்மன் டாக்டர் ஆ. ராம்குமார் தலைமையில் நடந்தது. பள்ளியின் முதல்வர் சாரதா, துணை முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த பெரம்பலூர் அறிவுத் திருக்கோவில் பேராசிரியர்கள் சுகன்யா, சரஸ்வதி ஆகியோர்கள் யோகாவை கற்றுக் கொடுத்தனர். யோகாவில் கலந்து கொண்ட மாணவர்கள் உடல் வளத்தையும், மனநலத்தையும் பாதுகாப்பது குறித்து தெரிந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497