Perambalur: One killed, another critically injured in bike accident!

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அருகே உள்ள மேட்டூரை சேர்ந்தவேர் ராஜபிரபு (45). கடம்பூரைச் சேர்ந்த தனுஷ் (22). ஆகிய இருவரும் இன்று காலை திருச்சிக்கு பைக்கில் சென்று விட்டு மீண்டும் மேட்டூருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபாலபுரம் தனியார் பால்பண்ணை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ராஜபிரபுவை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். உடன் வந்த தனுஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வு செய்தனர். மேலும் வழக்கு பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497