Perambalur: The police jailed the man who attacked the couple with an iron rod!

பெரம்பலூர் அருகே முன் விரோதம் காரணமாக தம்பதியை இரும்பு ராடால் தாக்கியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் துரைராஜ் (52) , இவரது மனைவி தேவகி. அதே ஊரை சேர்ந்த நல்லையா மகன் கருப்பையா. துரைராஜ் என்பவரது நகைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனது தொடர்பாக அந்த நேரத்தில் கருப்பையாவிற்கும் துரைராஜுக்கும் பிரச்சனை ஏற்பட்டிருந்தது. இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் துரைராஜியையும், அவரது மனைவி தேவகியையும் கருப்பையா மற்றும் அவருடன் 2 பேர் சேர்ந்து வந்து இரும்புராடால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் துரைராஜ் இடது கை, கால் முட்டிக்கு கீழ் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், வலது கை விரல் காயம் ஏற்பட்டது. தேவகிக்கு பின்னந்தலையில் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து படுகாயமடைந்த துரைராஜ் மற்றும் தேவகி ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பரிவு செய்த மருவத்தூர் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட கருப்பையாவை கைது செய்து குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!