Perambalur: Devotees offer Rs. 18 lakh in cash and 4 grams of gold in the hundial (offering box) of the Dhandayuthapani Temple in Chettikulam.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியலில் பக்தர்கள் அளித்த காணிக்கை எண்ணும் பணி 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும். இன்று கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் சிந்து லட்சுமி, செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி, அறநிலையத்துறை ஆய்வாளர் சுமதி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கோவில் பணியாளர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர், தன்னார்வலர்கள், உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 18 லட்சத்து 614 ரூபாய் ரொக்கமும், 4 கிராம் தங்கம், 175.780 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியிருந்தனர்.
இவைகள் அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497