Perambalur: Applications invited for membership in the Welfare Board for Christian Evangelists and Workers; Collector’s announcement.

பெரம்பலூர் மாவட்டத்தில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் நபர்கள் கிறித்துவ இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும், கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியர்க வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் ஆகியோருக்கு முறையான மாதாந்திர ஊதியம் என்று இல்லாமல் உள்ளிட்ட பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.

மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் www.cwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள், நல வாரியத்தில் உறுப்பினர்களாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!