Perambalur: Gold chain stolen from a woman who came to worship at a temple festival!

பெரம்பலூர் அருகே உள்ள மருவத்தூரில் இன்று கோயில் தேர் திருவிழா நடந்தது. அதில், கலந்து கொள்வதற்காக குரும்பாபாளையம் கிராமத்தில் வந்த நைனப்பன் மனைவி வளர்மதி (45) தேர் திருவிழாவில் சாமி கும்பிபட்டார்.பின்னர், அங்கு வழங்கப்பட்ட அன்னதானத்தில் உணவை பெற்றுக் கொண்டு சாப்பிட அமர்ந்த போது கழுத்தில் கிடந்த 6 பவுன் மதிப்புள்ள தங்க நகை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் மர்ம நபர்கள் திருடி சென்ற தங்கநகை மீட்டுத் தரக் கோரி மருவத்தூர் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் சிவிடிவி காட்சிகளை வைத்து தங்க செயினை எடுத்த சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497