Perambalur: Skill development training on sexual harassment against women under the POSH Act 2013!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின்கீழ் செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 (POSH ACT 2013) ன்படி அமைக்கப்பட்டுள்ள உள்ளக குழு மற்றும் உள்ளூர் குழு பற்றிய திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளக குழு, உள்ளூர் குழு உறுப்பினர்களுக்கும், வருவாய் கோட்டம், வட்டாரம், நகராட்சி, பேரூராட்சி அளவில் நியமிக்கப்பட்ட நோடல் அலுவலர்களுக்கும் மற்றும் தனியார் பள்ளி தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் கலெக்டர் ஷரண்யா தலைமையில் திறன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
அப்போது கலெக்டர் தெரிவித்தாவது: பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 (POSH ACT 2013) ன்படி அரசு மற்றும் தனியார் துறைகளில் 10 நபர்களுக்கு மேல் பணியாளர்கள் பணிபுரியும்பட்சத்தில் அங்கு கட்டாயம் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுத்திடும் வகையில் உள்ளக குழு அமைத்திட வேண்டும். அக்குழுவில் 50% பெண் பணியாளர்கள் இடம் பெற வேண்டும். அந்நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த பெண்பணியாளரை தலைவராக நியமிக்க வேண்டும். வெளிப்புற உறுப்பினர் (வழக்கறிஞர், மருத்துவர், தொண்டு நிறுவன பணியாளர்) இவர்களில் ஒருவர் இடம்பெற வேண்டும். மேலும் 10 நபர்களுக்கு குறைவாக பணியாளர்கள் உள்ள பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுத்திடும் வகையிலும், பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் மன அளவில் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவில் (Local Committee) உள்ளுர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் புகார் அளிக்க வசதியாக பாதுகாப்பு பெட்டி அமைக்கப்படும். மேலும் இச்சட்டம் பெண்கள் பணிக்கு செல்லவும் மற்றும் சுதந்திரமாக பணி செய்யவும் உறுதுணையாக அமையும் என தெரிவித்தார்.
மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, அரசு துறை அலுவலர்கள், மாவட்ட சமூக நல அலுவலகப் பணியாளர்கள், தொண்டு நிறுவனப் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497