Perambalur: Dam opened without prior notice; 9 people swept away in floodwaters rescued!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் வெள்ளாற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வெள்ளாற்றில் இன்று காலை 5 மணி அளவில் சுமார் 30,000 கன அடி தண்ணீர் முன்னறிவிப்பு இன்றி திறந்து விடப்பட்டது. அரங்கூர் – லப்பைக்குடிக்காடு வெள்ளாறு பகுதியில் ரோபோடிக் பொருட்காட்சி கடந்த 10 தினங்களாக நடைபெற்று வந்தது இந்த பொருட்காட்சி கடந்த 20ஆம் தேதி முடிவுற்றது. ஆனால், பொருட்காட்சியில் இடம்பெற்ற பொருள்களை பொருட்காட்சி ஊழியர்கள் கடந்த 4 தினங்களாக அகற்றி வந்தனர். இந்நிலையில் தொழுதூர் அணைக்கட்டு பகுதியில் திடீரென நீர்வரத்து அதிகமாக இருந்ததால் இன்று காலை சுமார் 30,000 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திறந்து விடப்பட்டது இதனால் பொருட்காட்சியை காலி செய்து கொண்டிருந்த சுமார் 9 ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த லப்பைக்குடிக்காடு பேரூராட்சித் துணைத் தலைவர் ரசூல் அகமது மற்றும் சலீம் ஆகியோர் தர்கா ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுவித்து வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்களை காப்பாற்றி வந்தனர். மேலும், பெரம்பலூர் மற்றும் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனார். தீயணைப்புத் துறையினர் உடனடியாக வெள்ளத்தில் சிக்கியர்கள் அனைவரையும் உயிர் சேதம் இல்லாமல் காப்பாற்றினர். இதனால் இன்று காலை அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497