Perambalur: Party members who cause disturbance to students in schools will be expelled without compromise; Minister Rajmohan speaks.

பெரம்பலூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ராஜ்மோகன் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்தாவது:
இன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சராக என்னுடைய பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்து பார்த்து, இங்க இருக்கக்கூடிய அத்தனை பெரியோரையும் சந்தித்ததில், அவர்களோடு சேர்ந்து சிந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. என்னோடு பெரம்பலூரினுடைய சட்டமன்ற உறுப்பினர் எங்க அண்ணன் (சிவக்குமார்) அவரும் என்னோடு சேர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தினோம். நம்முடைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினுடைய தலைவர்கள் அத்தனை பேரோடும் பேசி பெரம்பலூருக்கு என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பதை நாடறியும். இந்த சிறப்புகளை இன்னும் பொறுப்புகளோடு சேர்த்து இன்னும் பல்கிப் பெருகி, நல்ல முறையில் பெரம்பலூரை ஒரு பொறுப்புமிக்க, சிறப்புமிக்க, அனைத்திலும் நல்ல பேர் வாங்கக்கூடிய ஒரு மாவட்டமாக மாற்றுவதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது.
அதே மாதிரி இன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டத்தினுடைய மாணவ-மாணவியர் போதைக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல ஒரு 10 மாணவ-மாணவிகளை வந்து நேரிலேயே சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் 5 நபர்களோடு அளவளாவி அவர்களோடு தேநீர் பருகி, அதேபோல கல்வியில் சிறந்து 100% பாஸ் மார்க் வாங்கி கொடுத்த அந்த ஆசிரியர்களை எல்லாம் நேரில் அழைத்து அவர்களுக்கு எல்லாம் ஊக்கப்பரிசு கொடுத்து, ஒரு மாணவர் பெரம்பலூரில் இருந்து இப்ப ஐஐடி போகப்போகிறார், அவரை நேரில் சந்தித்து அவருக்கு ஒரு பரிசு கொடுத்து, கல்விப்பணி, களப்பணி, மக்கள் பணியோடு இன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டத்தை வந்து ஒரு ஆய்வுப்பணி தொடங்கி இருக்கிறது. இதில் வந்து ஊடக நண்பர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி.
ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இந்த பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் என்னுடைய அப்பா, என்னுடைய அம்மா, என்னுடைய தாத்தா என்னுடைய சொந்த பந்தங்கள் எல்லாம் இருக்கக்கூடிய என்னுடைய பூர்வீக ஊர் என்பது எனது கூடுதல் மகிழ்ச்சி. இது பூர்வீக அமைச்சராக மட்டும் இல்லை, ஒரு பொறுப்புமிக்க பொறுப்பு அமைச்சராகவும் செயல்படுவதற்கு உங்கள் அத்தனை பேரினுடைய ஒத்துழைப்பும் எனக்கு தேவைப்படுகிறது.
இந்த நேரத்தில் என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் அவர்களும், கழக மாவட்ட செயலாளர், நம்முடைய கட்சியினர் அத்தனை பேரையும் நேரில் சந்திக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள், வணக்கம்.
கேள்வி (செய்தியாளர்): பொதுவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு பாத்தீங்கன்னா 7.5% உள்ஒதுக்கீடு இருக்கு, மருத்துவத்தில் 10%. அதை வந்து அதிகப்படுத்த இந்த அரசுக்கு திட்டம் என்ன இருக்கா? இன்னொன்று அந்த உள்ஒதுக்கீட்டில் பாத்தீங்கன்னா பாராமெடிக்கல் சயின்ஸுக்கு அந்த இடஒதுக்கீடு இல்லை. அதை வந்து சேர்க்கிறதுக்கு ஏதாவது ஆவண செய்யணுமா?
பதில் ( அமைச்சர் ராஜ்மோகன்) : கல்வியை பொறுத்தவரைக்கும், அது ஒரு சமச்சீரான ஒரு போக்கு இருக்கணும். ஃபார் எக்ஸாம்பிள் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் ஹையர் எஜுகேஷனில் இந்த வாட்டி எவ்வளவு என்ரோல்மென்ட் வந்தது என்று நம்ம பார்க்கணும். ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் வந்த அளவுக்கும், ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் சார்ந்த கோர்ஸஸில் வந்த அளவுக்கும் கண்டிப்பா ஒரு வேறுபாடு இருக்கும். இப்ப மெடிக்கல் கோர்சஸ் என்றால் அதுக்கு நிறைய ஒரு வரவேற்பும், பேராமெடிக்கல் கோர்சஸ் என்றால் அதில் ஒரு சின்ன சலனமும் இருக்குறத நாம பார்க்க முடியும். இன்னும் பேராமெடிக்கலிலேயே நிறைய இப்ப அட்வான்ஸ்டா எமர்ஜென்சி ட்ராமா கேர் என்று ஒரு கோர்ஸ் இருக்கு, கிரிட்டிக்கல் கேர் என்று ஒரு கோர்ஸ் வந்துருக்கு. போன வாரம் கூட ஒரு கிரைசிஸ்ஸ நாம வந்து எதிர்கொண்டோம், அது மாதிரி நாங்க வந்து ‘டாய்’ என்று ஒரு அமைப்பு மருத்துவத்துறையில் ஈடுபடுத்துகிறோம். அப்ப எமர்ஜிங் கோர்சஸ் வர வர ட்ரெடிஷனலாக இருக்கக்கூடிய இடங்களில் வந்து வேகன்சி அதிகமாகிவிடும். அப்ப அதை போக்கணும். அதே மாதிரி முதல் தலைமுறையாக ஹையர் எஜுகேஷன் போறாங்க இல்லையா, அவர்களுக்கெல்லாம் உதவி செய்வதற்காக இதை போன்ற இடஒதுக்கீடு மட்டும் கிடையாது, அவர்களுக்கான அதை என்ஹான்ஸ் பண்றது, அவர்களுக்கு அப்படி ஒன்று இருக்கு, நீங்களும் உயர்தரமான அந்த உயர்நிலை கல்வி இருக்குல்ல ஐஐஎம், ஐஐடி போன்ற விஷயங்களுக்கு எல்லாம் போவதற்கு உங்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ ஒரு நல்ல என்விரான்மென்ட் தேவைப்படுகிறது. வெறும் நம்பர்ஸ் மட்டும் பத்தாது. ஒரு செடி பூ பூக்கவில்லை என்றால் அது அந்த செடியோட பிரச்சனை கிடையாது பிரதர். அந்த மண்ணு நல்லா இருக்கணும், உரம் நல்லா இருக்கணும், மழைப்பொழிவு இருக்கணும், அதை பராமரிக்கணும். அப்ப ஒரு மாணவனோ, மாணவியோ ஒரு கோர்ஸில் மட்டும் ஜெயிக்கவில்லை, ஒரு இடத்தில் வரவில்லை என்றால் அது அந்த குழந்தையோட பிரச்சனை கிடையாது. எங்க எல்லாருக்கும் அதில் பங்கு இருக்கு. அந்த ஒரு மண்ணோ, உரமோ, மழையோ, தண்ணீரோ இருக்கிற மாதிரி அவர்களுக்கு தேவைப்படுகிற அவேர்னஸை முதலில் விழிப்புணர்வு வந்து என்னென்ன கோர்சஸ் இருக்கு, அது புதுசா வந்ததுனாலேயே அதில் சேர வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. அப்ப ஆல்ரெடி எக்ஸிஸ்டிங் கோர்ஸஸில் என்ன இருக்கு, அது ரொம்ப பழசு என்பதற்காக அதில் சேர்ந்துவிட்டால் ஸ்கோப் இல்லை என்றெல்லாம் கிடையாது. தனித்திறமையும், ஸ்கில்ஸும் அதோடு மேட்ச் ஆகக்கூடிய எந்த குழந்தையும் அதில் பேசலாம். இப்ப நான் தமிழ் வகுப்பு, தன்னம்பிக்கை வகுப்பு, தலைமைத்துவ வகுப்பு, இது மூன்றையும் ஆல்ரெடி எக்ஸிக்யூட் பண்ற பிளானில் இருக்கிறேன். அதே மாதிரி இந்த கோர்சஸ் சார்ந்த விழிப்புணர்வு வகுப்புகளையும் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகப்படுத்துகிறேன். இப்ப பாத்தீங்கன்னா, நம்ம அரசு பள்ளி மாணவர்களை பாராட்டி இருக்கிறோம், ஆசிரியர்களையும் பாராட்டி இருக்கிறோம்.
கேள்வி : எமிஸ் (EMIS) அப்படிங்கிற ஒரு நம்பரை வச்சுத்தான் அவங்க ஐடென்டிஃபை பண்றாங்க. ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வந்து மாணவர்களை சேர்க்கிறதுக்காக வேண்டி இந்த தனியார் மயம், அந்த மோகம், பள்ளி பேருந்து இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் தாண்டி அவங்க கஷ்டப்பட்டு சேர்த்ததுக்கு அப்புறம், திடீர்னு பார்த்தீங்கன்னா இன்னைக்கு ஆசிரியர் போய் வகுப்பு எடுக்கும் பொழுது, அந்த கிளாஸ் அட்டண்டன்ஸ் எடுக்கும் பொழுது பார்த்தால் ஒரு பையன் காணாமல் போயிடுறான். என்னன்னு பார்த்தீங்கன்னா, அவன் வேற ஒரு ஸ்கூலில் போய் அட்மிஷன் போடுறான். இதைத் தடுக்குறதுக்கு பழைய முறையில் டிசியோ அல்லது வேற ஏதாவது அந்தப் பள்ளியிலிருந்து ஆவணங்கள் வாங்கணும்ங்கிற ஒரு கட்டாயம் இருக்கும் பட்சத்தில் அவங்க போய் டிசி கேட்கும்பொழுது, அந்த ஸ்கூலோட பெருமைகளைப் பற்றியோ இல்ல நம்ம ஊர் ஸ்கூலில் படிக்கணும் போகணும்னு HM பேச முடியும். இப்ப அதுக்குண்டான வாய்ப்புகளே கிடையாது. இவங்க கஷ்டப்பட்டு சேர்க்கிறாங்க, சேர்த்த அடுத்த செகண்ட் அந்த ஸ்டூடென்ட் அவன் தன்னிச்சையாவே போயிடுறான், எந்தவிதமான எதுவுமே இல்லாமல் இருக்கு. இதை மாத்துறதுக்கும், அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகரித்து தனியார் மயத்தை போக்குவதற்கு ஏதாவது வழிவகைகள் இருக்கா?
பதில்: நான் இன்றைய தினமே வந்து கொஞ்சம் காலதாமதம் ஆயிடுச்சு, கொத்தவாசல் நடுநிலைப் பள்ளி பிரைவேட் ஸ்கூல்ஸ்க்கு ஈக்குவலாக கொஞ்சம் கொஞ்சமாக பெர்ஃபார்மன்ஸில் இம்ப்ரூவ்மென்ட் காட்டிக்கிட்டே வருது. அதை நேரில் போய் நான் ஆய்வு செய்யப் போறேன். அங்கே இருக்கிற இன்ஃப்ராஸ்ட்ரக்சர், அந்த என்விரான்மென்ட் நான் சொன்னேன் அல்லவா, அந்த என்விரான்மென்ட்டை அவங்க என்ஹான்ஸ் பண்ணியிருக்காங்க. அப்ப அதை நாம ஆய்வு பண்றது மட்டும் கிடையாது, அதை எக்ஸிபிட் பண்ணனும். இப்படி ஒரு சிஸ்டத்தில் இப்படி கொடுக்க, இப்படி ஒரு சிஸ்டத்தில் நாம போட்ட திட்டங்களும் சராசரியாக 50 விழுக்காடு வேருக்குப் போய் வெளிச்சமாக வந்தால் பெரிய விஷயமாகும். அது வேர் வரை எப்படி போயிருக்கு, அதை பகுப்பாய்வு செய்து நாம எக்ஸிபிட் பண்ணனும். அப்புறங்க, இரண்டுமே இரண்டு கண்ணு தான், அரசு பள்ளி வந்து எங்களுடைய முக்கியமான கண்ணு, தனியார் பள்ளியும் அவங்க வந்து தனியாரிடம் இருக்கிறதால அவங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் ஒதுக்கீடு பண்ண மாட்டோம். அங்கே படிக்கிற குழந்தையும் நம்ம குழந்தை தான். இருவரையுமே சரிசமமாகத்தான் பார்க்கிறோம். ஒன்னே ஒன்னு என்னன்னா, தனியார் பள்ளிகள் வந்து ஊக்குவிப்பு அதிகமாகி அரசு பள்ளிகளை விட்றவே கூடாது. அரசு பள்ளிகள் என்பது எங்களுடைய ஆன்மா. அப்ப தனியார் பள்ளிகளுக்கு ஈக்குவலாக அரசு பள்ளிகளினுடைய வசதி வாய்ப்புகளை நாம மெயின்டனன்ஸை கொண்டு வரணும். இப்ப என்ன? ஒரு உதாரணத்திற்கு ஒரு அமைச்சர் ஒரு நபார்டு வங்கியில் ஏதோ ஒன்று பேசி திட்டத்தில் ஒரு நிதி ஒதுக்கீடு செய்து ஃபைனான்சியல் சாங்க்ஷன்ஸ் செய்து ஒரு திட்டம் போட்டுடுறாங்க. ஒரு உதாரணத்துக்கு சொல்லணும், ஒரு கழிப்பறை கட்டிக் கொடுக்கிறோம்னு வைங்களேன், அடுத்த மாசம் போய் பார்த்தால் அந்த கழிப்பறை பைப்பில் தண்ணீர் வரவில்லை என்றால் அதில் எந்த பயனும் இல்லை. அடுத்த வருஷம் போய் பார்த்தால் அந்த கழிப்பறையினுடைய பீங்கானில் விரிசல் விட்டிருந்தால் அது அதைவிட மோசம். அப்ப ஒரு விஷயத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்துவது மட்டும் அல்ல, இந்த திட்டத்திற்கு இவ்வளவு செலவு பண்ணிட்டோம் அது அல்ல, இதுக்கு அப்புறமேட்டு எப்படி பண்ணனும்னா அதோடைய மெயின்டனன்ஸ் என்ன ஆச்சு? அந்த மெயின்டனன்ஸ் ஒழுங்காக இருக்கா? மன்த்லி ரிப்பேர் பண்ணனுமா, இயர்லி ரீஸ்டோர் பண்ணனுமா? இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நம்ம கணக்கில் எடுக்கணும். அதனால இந்த பள்ளிக்கூடத்திலிருந்து தொடங்கி அரசு பள்ளிகளையும் இப்படி சொல்வதே ரொம்ப வேதனையாகத்தான் இருக்கு. ஆனால் ஒரு நாள், ஒரே நாளில் இல்லை, ஒரு நாள் அந்த நிலைமை வந்து நிச்சயமாக அடையும். அரசு பள்ளிகளில் பல்கிப் பெருகி மாணவர்கள் அதிகமாக வருவாங்க. அப்புறம் பாப்புலேஷனும் இன்டெக்ஸும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கு
கேள்வி: அரசுப் பள்ளிகளில் கல்வித்துறையில் எலிமெண்டரி ஸ்கூல், நடுநிலைப்பள்ளிகளில் HM போஸ்ட் இருக்கு, அப்படியே வேகன்ட்டாகவே இருக்கு, பிரமோஷன் கவுன்சிலிங் எப்போ வைக்கிற மாதிரி? சிஇஓ, டிஇஓ-வும் வேகன்ட் அதிகமா இருக்கு.
பதில்: ஆமாம், அதுக்கான, ஆயத்தப் பணிகள் தயார். அதுக்கான டிஸ்கஷன்ஸ் எல்லாம் முடிச்சுட்டோம். வெகுவிரைவில் தகுதி மற்றும் திறமை இரண்டின் அடிப்படையில் அதெல்லாம் நிரப்பப்படும்.
கேள்வி: இப்ப பெரும்பாலான பள்ளிகளில் வொகேஷனல் குரூப்பை எடுத்துட்டாங்க. அதாவது வேளாண் பாடங்கள் நடத்தப்படவில்லை, அந்த, குரூப்பிலேயே அட்மிஷன் போடலைன்னு ஒரு குற்றச்சாட்டு வந்திருக்குங்க?
பதில்: தமிழக முதலமைச்சர் அவர்கள், வெகுவிரைவில் தமிழ்நாட்டிற்கென ஒரு தனிப்பெரும் ஸ்போர்ட்ஸ் பாலிசியை (விளையாட்டுக் கொள்கையை) அறிமுகப்படுத்தப் போகிறார். அதைப்போன்ற ஒரு ஆரம்பக்கட்ட டிஸ்கஷனில் (கலந்துரையாடலில்) இருக்கிறது. இந்த வொகேஷனல் கோர்ஸஸாக (தொழிற்கல்வி பாடப் பிரிவுகள்) இருக்கட்டும் அல்லது எமர்ஜிங் (வளர்ந்து வரக்கூடிய) தற்காலத் தன்மைக்கு ஏற்றவாறு, கல்வியில் நமக்கு வந்து இரண்டு, மூன்று ஆப்ஷன்தான் (தெரிவுகள்) இருக்கிறது. இரண்டு, மூன்று கோர்ஸஸ்தான் (பாடப்பிரிவுகள்) அவங்க வந்து சேர முடியும்; குரூப்ஸ்தான் சேர முடியும். அப்படிக் இல்லாமல் அந்த குரூப்ஸையே நமக்கு வந்து புதுசாக அறிமுகப்படுத்தலாம். அதில் நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கிறது; ஸ்போர்ட்ஸ் இருக்கிறது, வொகேஷனல் இருக்கிறது. அவர்களுக்கு தனித்திறமையை வளர்த்துக்கொள்ளக்கூடிய பல குரூப்ஸ் இருக்கிறது.
நீங்க ஐ.டி.ஐ-யில் ஒரு மாணவன் போய் சேர்ந்தார் என்றால், 100% அவருக்கு வேலைவாய்ப்பு உறுதி. அது எல்லாருக்குமே தெரிந்த ‘ஓபன் சீக்ரெட்’ (பகிரங்க ரகசியம்) மாதிரி. ஆனால், ஐ.டி.ஐ-க்கு போகாமல் பிளஸ் 1, பிளஸ் 2 போனால் ஹையர் எஜுகேஷனில் (உயர்கல்வி) இன்னும் அவங்க வேறொரு இடத்திற்குப் போக முடியும். அப்ப இரண்டையுமே நாம வந்து பேரலலாக (இணையாக) வளர்த்துக்கொண்டு வர வேண்டும். அப்ப மாணவர்களுக்கான ஆப்ஷன்ஸை அதிகரிக்க, குரூப்ஸை அதிகரிப்பதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறோம்.
கேள்வி: அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு புதிய திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா?
பதில் : லீக்கேஜஸை (கசிவுகளை) தடுக்க வேண்டும். இந்த குவாலிட்டி ஆஃப் இன்ஃப்ராஸ்ட்ரக்சரை (கட்டமைப்பின் தரம்) இம்ப்ரூவ் பண்ண வேண்டும் (மேம்படுத்த வேண்டும்) என்று சொன்னால், அதை இரண்டு வகையாக இம்ப்ரூவ் பண்ணலாம்.மூலப்பொருட்களினுடைய விலை. என்ன விலைக்கு மூலப்பொருட்கள் கிடைத்தாலும், கட்டுமானத்தினுடைய கான்ட்ராக்டர் (ஒப்பந்ததாரர்) இருக்கிறார் பாருங்கள், அவர் வந்து அவருடைய பிராஃபிட் மார்ஜினை (லாப வரம்பு) குறைப்பது.
அப்ப, ஆல்ரெடி இருக்கக்கூடிய இந்த கல்வித்துறையில் அங்கங்கே சில லீக்கேஜஸ் இருந்தது. அதை லீக்கேஜ் என்று நாம நாகரிகமாக சொல்வது ஒருவகையில் ஊழல் என்று கூட சொல்லலாம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதையெல்லாம் அடைத்துவிட்டோம் என்றாலே, தேவையற்ற பண விரயத்தை நிறுத்திவிட்டாலே, மறைமுக இழப்பு நமக்கு தடுக்கப்பட்டுவிடும். மறைமுக இழப்பு தடுக்கப்பட்டுவிட்டால், நேரடியான வருவாய் பெருகும். நேரடியான வருவாய் பெருகினால், இன்னைக்கு 10 குழந்தைக்கு நாம சோசியல் வெல்ஃபேரில் (சமூக நலத்துறை) முட்டை போடுவதை, 15 குழந்தைக்குப் போட முடியும். எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தை, 12-ஆம் வகுப்பு வரைக்கும் இது ஒரு தொடர் சங்கிலிதான். அப்ப அந்த லீக்கேஜை தடுப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கேள்வி: நேற்று சட்டமன்றத்தில் முதல்வர் பேசியதற்கு, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சர் சிவசங்கரும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் பண்ணி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: அது அரசியலைப் பொறுத்தவரைக்கும், நாகரிக அரசியலில் நடைபயிலத்தான் என்னுடைய வெற்றித் தலைவர் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். காவியத் தமிழை கம்பர் சொல்லித் தந்தார்; காப்பியத் தமிழை இளங்கோ சொல்லித் தந்தார்; வாழ்வியல் தமிழை வள்ளுவர் தந்தார். அதில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதுதான் வழிகாட்டி வாசகம் என்று எங்களுக்கெல்லாம் வெற்றித் தலைவர் தான் சொல்லித் தந்தார். அப்ப ‘ஆல் ஆர் ஈக்குவல்’ (அனைவரும் சமம்). பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதில் ஈக்குவாலிட்டி (சமத்துவம்) வந்துவிடுகிறது.
சட்டமன்றமே நாங்க அப்படித்தான் பார்த்தோம். ஆளுங்கட்சிக்கு என்ன சான்ஸ் (வாய்ப்பு) கொடுத்தார்களோ, எதிர்க்கட்சிக்கும் அதே சான்ஸ் கொடுத்தார்கள்; ‘ஃபேர் சான்ஸ்’ (நியாயமான வாய்ப்பு) கொடுத்தார். உண்மையிலேயே மாண்புமிகு பேரவைத் தலைவர் சபாநாயகர் ஐயா அவர்கள் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்டவர். “எனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால், நான் ஜே.சி.டி பிரபாகருக்கே கட்டிக்கொடுப்பேன்” என்று புரட்சித்தலைவர் சொன்னார் என்றால், அப்ப எந்த அளவுக்குத் தனித்தன்மையோடு இருந்திருக்கிறார் பாருங்கள்.
அவர் இந்த சட்டமன்றத்திற்கும் சபாநாயகராகத் தனித்தன்மையோடு இருந்தார். வரலாற்றிலேயே முதன்முறையாக முழுமையாக நேரலை சென்றுகொண்டிருந்தது. இவ்வளவும் இருந்தபிறகும், சட்டமன்றத்தை சத்தமன்றமாக மாற்றி, எதிர்த்துப் பேசினால் மட்டும்தான் எதிர்க்கட்சி என்று கிடையாது; அவங்க ஆக்கப்பூர்வமாக ஒரு ஐந்து பாயிண்ட் பாராட்டி கூடப் பேசியிருக்கலாம். அதையெல்லாம் தாண்டி, அவர்கள் வந்து அப்படிப் பேசியது நாகரிக அரசியலில் அது ஏற்புடையது அல்ல.
கேள்வி: சைக்கிள் வந்து ஆறாம் வகுப்பிலேயே கொடுத்தால் நன்றாக இருக்கும்? 11-ஆம் வகுப்பில் கொடுப்பதற்குப் பதிலாக, ஏனென்றால் அதையெல்லாம் தூக்கி எடைக்குத்தான் போட்டுக்கொண்டு போகிறார்கள். அதை ஆறாம் வகுப்பிலேயே கொடுப்பதற்கு முயற்சி செய்தீர்கள் என்றால் ஏழைப் பிள்ளைகளுக்குப் பயன்படும் அல்லவா?
பதில்: கண்டிப்பாக ஆய்வு செய்து கன்சிடர் (பரிசீலனை) பண்ணுகிறேன்.
கேள்வி: சமூக வலைத்தளங்களில் பார்த்தீர்கள் என்றால், தமிழக முதல்வருடைய பிறந்தநாள் அப்பொழுது, ஒரு பள்ளியில் அவருடைய திரைப்படப் பாடலை பாட வைத்ததாகச் சொல்லி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் போய்க்கொண்டிருந்தது. அது எந்தப் பள்ளி அப்படி என்பதை ஆய்வு செய்வதற்கான ஒரு பக்கம் போனாலும், இது வந்து தவறான வழிமுறைகளுக்குப் போய் சேரும்; பள்ளி மாணவர்களை இந்த மாதிரி சினிமா பாடல்கள் மூலமாகக் கொண்டு போவது தவறான வழிகாட்டுதலாக இருக்கும் அப்படின்ற மாதிரியான கருத்துக்கள் இணையத்தில் வலுத்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்துவதற்கும்
தொடர்ந்து பார்த்தீர்கள் என்றால், த.வெ.க வில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் பள்ளிகளில் போய் நேரடியாக உதவி செய்யக் கூடாது, தலைமையாசிரியரிடம் தான் எல்லா நிதி உதவியும் கொடுக்கணும், அந்த நலத்திட்டங்களை வழங்கணும் அப்படின்ற மாதிரியான ஒரு உத்தரவு கொடுத்திருந்தீங்க மீறினால் நடவடிக்கை அப்படின்னீங்க. நாகப்பட்டினமாக இருக்கட்டும், இப்ப ரீசண்டா காஞ்சிபுரம், இந்த மாதிரி நிகழ்வுகள் வந்து தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கு. மாணவர்களை அரசியல் கட்சிகள் அழைத்துக்கொண்டு போவது இந்த மாதிரியான நிகழ்வுகள் வந்துகிட்டே இருக்கு. இதை முழுமையாகத் தடுப்பதற்கும், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் த.வெ.க கொண்டு வரணும் என்ற எதிர்பார்ப்பில் வைக்கிறாங்க பொதுமக்கள். அதுக்கான நடவடிக்கைகள் என்ன?
பதில் : தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும், மற்ற கட்சியாக இருந்தால் கூட சும்மா ஒரு 15 நாள் சஸ்பெண்ட் (தற்காலிக நீக்கம்) பண்ணியிருப்பார்கள், விளக்கம் கேட்டிருப்பார்கள். வேற பிரச்சனையாக இருந்தால் கூட நாமும் அப்படித்தான் அணுகுவோம். ஆனால், ஒரு பள்ளிக்கூடத்தில் போய், வேலைநாளில் போய், மாணவர்களை டிஸ்டர்ப் (தொந்தரவு) பண்ணி, அவர்களை ஈடுபடுத்தியோ ஈடுபடுத்தாமலோ, அவங்களை ரீல்ஸ் எல்லாம் எடுத்து, கட்சித் துண்டோடு உள்ளே போய் இவ்வளவு டிஸ்டர்பன்ஸ் (தொந்தரவு) பண்ணிட்டாங்கன்னா ‘ஜீரோ டாலரன்ஸ்’ (சகிப்புத்தன்மையற்ற நிலை). அது பொறுத்துக்கொள்ள முடியாது. இதுவரை நடந்திருந்தாலும் சரி, இனிமேல் யார் எத்தனைத்தாலும் சரி, பொறுத்துக்கொள்ளவே முடியாது. பர்சனலாக (தனிப்பட்ட முறையில்) என்னுடைய பொதுச்செயலாளர், சீனியர் மினிஸ்டர் (மூத்த அமைச்சர்) என்.ஆனந்த் அவர்களோடு தொலைபேசியில் இதைப் பற்றி விரிவாக நாங்கள் இரண்டு பேரும் விவாதித்தோம். அப்புறம் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒரு ஒன்றிய செயலாளரைக் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறோம். கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்கள் அப்ப இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு ஸ்ட்ராங் மெசேஜ் (வலுவான செய்தி) சொல்கிறோம் பள்ளிக்கூடத்திற்கு, மாணவர்களுக்கு டிஸ்டர்பன்ஸ் தரும் மாதிரி யாரும் எதுவுமே பண்ணக்கூடாது.
கேள்வி : தொந்தரவு தந்த காரணத்திற்காகவா?
பதில் : ஆமாம், பள்ளிக்கூடத்தில் போய் இந்த மாதிரி வீடியோ எல்லாம் எடுத்து தொந்தரவு பண்ணியிருக்கிறார்கள், வேலைநாட்களில் அந்தப் பிள்ளைகளையெல்லாம் ஈடுபடுத்தி வீடியோ எடுத்திருக்கிறார்கள் ஒன்றிய செயலாளரைக் கட்சியை விட்டு நீக்கியிருக்கிறோம். ஆக, இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு ‘ஸ்ட்ராங் மெசேஜ் டு எவ்ரிஒன்’ (அனைவருக்கும் வலுவான செய்தி). ஸ்கூல் எஜுகேஷனைப் (பள்ளி கல்வி) பொறுத்தவரைக்கும், பிள்ளைகளை எந்த வகையிலும் யாரும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. இன்னொரு பக்கம், இன்னைக்கு நேற்றைக்குக் கிடையாது, கிட்டத்தட்ட 28 வருஷமாகப் பள்ளி மாணவர்களுக்கு நிறைய நலத்திட்ட உதவிகள் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்ப கட்சி இல்லை இப்ப கட்சியும் இருக்கிறது, ஆட்சியும் இருக்கிறது. அதை உணர்ந்துகொண்டு தமிழக வெற்றிக் கழகத்தினுடைய பாசத்திற்குரிய நிர்வாகிகள், இன்னும் கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி: கடந்த ஆட்சிக் காலத்தில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தியதால், சென்ட்ரல் கவர்ன்மெண்ட் (மத்திய அரசு) கல்வி நிதி தருவோம் என்று சொல்லியிருக்காங்க. இப்ப த.வெ.க அரசு வந்து ஆல்ரெடி சட்டமன்றத்தில் சொல்லியிருக்காங்க இருமொழிக் கொள்கைதான் என்று. இப்ப அடுத்து சென்ட்ரல் கவர்ன்மெண்ட் கூட பேசி அந்த நிதி வரவைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?
பதில்: இருமொழிக் கொள்கை என்பது எங்களுடைய டி.என்.ஏ (DNA); இருமொழிக் கொள்கை என்பது எங்களுடைய கொள்கை இருமொழிக் கொள்கை தான் கோட்பாடு. அதேசமயம் மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதி என்பது, அந்த இருமொழிக் கொள்கையை விட்டுக் கொடுத்தால்தான் கொடுக்க முடியும் என்பது ஏற்புடையது அல்ல. அப்ப இருமொழிக் கொள்கையைக் கட்டாயமாக நாங்க விட்டுக் தரமாட்டோம் வரவேண்டிய நிதியை வாங்காமலும் விடமாட்டோம் என பேசினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497