Perambalur: The “Start Run, STOP Drugs” awareness run against drug abuse is taking place tomorrow!

ஜூன் 26 ஆம் நாள் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள், இளைஞர்கள், வீரர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்திட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு மூலம் Start Run, STOP Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் நாளை 5 கி.மீட்டர் தூரம் நடைபெறுகிறது.

இந்த விழிப்புணர்வு ஓட்டம் ஜூன் 26 ஆம் நாள் அன்று காலை 6 மணி அளவில் மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட தொழில் மையத்தில் தொடங்கி பாலக்கரை, நகராட்சி அலுவலகம் வழியாக மலர் மருத்துவமனையில் திரும்பி மீண்டும் தொழில் மையத்தில் முடிவடையும். 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ள இயலும். ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு ஓட்டத்திற்கு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 74017 03516 என்ற எண்ணினை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!