Perambalur: TVK party members worshipped at the Siruvachur Madhurakaliamman Temple by pulling the golden chariot.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயிலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்ததை தவெக கட்சியி நிர்வாகி அய்யலூர் விஜய் தலைமையில் அக்கட்சியினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் 2026-ல் நடந்த சட்டசபை தேர்தலில, தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அதை தொடர்ந்து பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற சிவக்குமார் நேற்று எம்எல்ஏ பதவி ஏற்றார் .
இருவரும் நீண்ட ஆயுளோடு மக்களுக்கான சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி தமிழக மக்கள் நலன் தாக்க வேண்டியும், பெரம்பலூர் எம்எல்ஏ சிவகுமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டியும், அருள்மிகு மதுரகாளியம்மன் கோயிலில் தவெக நிர்வாகி அய்யலூர் விஜய் தலைமையில் தங்கத்தேர் இழுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
நிகழ்ச்சியில், பெரம்பலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன், தெற்கு ஒன்றிய செயலாளர் வினோத், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆலந்துரை, ஒன்றிய மாவட்ட நிர்வாகி பேபி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஷாலினி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர் .











kaalaimalar2@gmail.com |
9003770497