Perambalur: Student admissions are underway at the Government Polytechnic College — Collector informs.

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு முழுநேர தொழில் நுட்ப பயிற்சியுடன் கூடிய பட்டயப்படிப்பிற்கான மாணாக்கர்கள் சேர்க்கையின் விண்ணப்ப பதிவு இணையதளம் https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக நடந்து வருகிறது.

முதலாம் ஆண்டு மாணாக்கர்கள் சேர்க்கைக்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 30.05.2026 ஆகும். நேரடி இரண்டாம் ஆண்டு மாணாக்கர்கள் சேர்க்கைக்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 25.05.2026 ஆகும்.

முதலாம் ஆண்டு சேர விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி (SSLC / MATRICULATION) அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு சேர விரும்புவோர் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில் நுட்பக் கல்லூரியில் சேரும் மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை, சிறப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணம் – ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,142 மாணவர் சேர்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடர்பாக விவரங்களை அறிய நேரிலோ அல்லது 04328-243200, 243100 9976577570, 9626652336, 9003794703, 9361357035 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம் ரூ.150, மாணவர்கள் பதிவு கட்டணத்தை கிரிடிட், டெபிட் மற்றும் நெட் பேக்ககிங் மூலமாக செலுத்தலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. ஆறாம் பருவ மாணாக்கர்களுக்கு பயிற்சி உதவித்தொகையுடன் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் பணிமனை வசதி ஆகியவை இக்கல்லூரியின் சிறப்பம்சங்களாகும்.

இக்கல்லூரியில் அமைப்பியல் துறை (Civil), இயந்திரவியல் துறை (Mechanical), மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை (EEE), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE), கணிப்பொறியியல் துறை (Computer), இன்டர்நெட் ஆப் திங்ஸ் (DIOT), ஆட்டோமேசன் மற்றும் ரோபோட்டிக்ஸ் (DAR), டிஜிட்டல் மெனுபேக்சரிங் டெக்னாலோஜிஸ் (DDMT) ஆகிய தொழில் நுட்ப பாடப்பிரிவுகள் உள்ளன. தரமான கல்வி மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள், ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள் உள்ளது. மாணவ மாணவிகளுக்கு அரசு இலவச விடுதியும், கட்டணத்துடன் கூடிய விடுதிகளும் உள்ளது. மாணாக்கர்களுக்கு அரசின் பல்வேறு கல்வி உதவித்தொகைகளும் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு பிரிவின் மூலமாக அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கட்டாய வேலை வாய்ப்பு உறுதி செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். 2025 – 2026 ஆம் கல்வியாண்டின் இறுதியாண்டில் பயின்ற 155 மாணாக்கர்களுக்கும் 100 சதவிகிதம் வேலை வாய்ப்பு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, தொழில்நுட்ப கல்வி பயில விருப்பமுள்ளவர்கள், பல்வேறு வசதிகளை வழங்கும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் மிருணாளினி கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!