Perambalur: Collector Orders Immediate Procurement of Paddy Sacks at Direct Procurement Centers!

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 23 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. 2025-26 தற்போது நடைபெற்று வரும் சம்பா பருவத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.2545/-ம் பொது ரகத்திற்கு ரூ.2500/- என்ற விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குன்னம் வட்டம், வடக்கலூர் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் மிருணாளினி பார்வையிட்டார்.
அப்போது, அங்கிருந்த விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் தரம், எடை பரிசோதனை, இருப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, உரிய நேரத்தில் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், கொள்முதல் நிலையங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் நெல் கொள்முதல் விரைவாக நடத்தப்பட வேண்டும். தேவைக்கு ஏற்ப போதிய அளவிலான பணியாளர்களை நியமித்து நெல் கொள்முதல் செய்வதில் எந்தவித சுணக்கமும் இல்லாமல் அனைத்து பணிகளும் விரைந்து நடைபெற வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.











kaalaimalar2@gmail.com |
9003770497