Perambalur: Tamil Nadu Chief Minister Joseph Vijay Orders Closure of Liquor Shops! Welcomed by Women; Yet, Bias in Implementation: One Shop Closed, While Another Continues to Operate!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவி ஏற்று கொண்டதைத் தொடர்ந்து இன்று காலை தமிழகம் முழுவதிலும், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் 500 மீட்டருக்குள் உள்ள 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூட உத்தரவு விட்டார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 32 டாஸ்மாக் மதுபான கடைகளில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள 6309, 6311 என்ற 2கடைகள் மட்டும் மூடப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கடை இன்று காலை முதல் மூடப்பட்ட நிலையில், புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள 6309 என்ற கடையில் மது அருந்தும் கூடத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதால் சில தினங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு மூடப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி மதுபான கடை மூடப்பட்டதற்கு பெண்கள் வரவேற்பு தெரித்துள்ளனர். மேலும் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைவதோடு குடும்பங்களில் பிரச்சனைகள் ஏற்படாது என்றும் தெரிவித்தனர்.
இதே போல தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகமாக ஏற்பட சாலையின் அருகே உள்ள மதுபானக் கடைகளும் முக்கிய காரணம் என கண்டறிப்பட்டநிலையில் அவற்றையும் முதலமைச்ர் மூட உத்தரவிட்டு விபத்துகளையும், உயிர்பலிகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ள முதல்வர் ஜோசப் விஜயை பொதுமக்கள் தற்போது வெகுவாக பாராட்டி வருகின்றனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497