Perambalur: TVK MLA Sivakumar met the Collector—who had walked away while presenting the victory certificate—today, presenting him with a bouquet.

பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ சிவக்குமார் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் பதவி ஏற்ற பின்பு பெரம்பலூர் வந்த அவர் மரியாதை நிமித்தம் காரணமாக இன்று பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினி, போலீஸ் எஸ்.பி பிரபாகர் ஆகியோரை சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் சந்தித்து பேசினார்.

தேர்தல் நாளன்று தவெக வேட்பளார் சிவக்குமார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்க வந்த போது, கலெக்டர் மிருணாளினி இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் அனிதா வழங்கினார். பின்னர், குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சிவசங்கர் வெற்றிச் சான்றிதழ் பெற வந்து போது இருக்கையில் இருந்து எழுந்து வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலுடன் சான்றிதழ் வழங்கினார்.

ஆனால், இன்று எம்.எல்.ஏ வாக பதவியேற்று வந்த பெரம்பலூர் எம்.எல்.ஏ சிவக்குமாரிடம் புன்முறுவலுடன் பூங்கொத்தை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கலெக்டர் என்பவர் உறவுகள், சாதி, மதங்களுக்கு அப்பாற்றட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே, மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொண்ட போது, மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் கலெக்டர் மக்கள் தீர்ப்பை ஏற்காமல் சொந்த விருப்பு வெறுப்பை வெளிக்காட்டியதை கண்ட அதிகாரிகள், செய்தியாளர்கள், பூத் மற்றும் வேட்பாளர்கள் ஏஜன்டுகள் அதிகார மையம் இப்படியா நினைத்து சென்றனர்.

எம்.எல்.ஏ சிவக்குமார் கலெக்டர். எஸ்.பியை சந்தித்த போது தவெக மாவட்ட ஐ.டி விங் ராஜேஷ், ஈஸ்வர் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர்கள் புருஷோத்தமன், வினோத், உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!