Perambalur: Minister Rajmohan inaugurated 11 buildings—including a new bus stand—and distributed welfare assistance worth Rs. 1.21 crore!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், கலெக்டர் ப.அப்துல் ராசிக் தலைமையில் ரூ.12.83 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 11 புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, ரூ.1.21 கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜ்மோகன் விழாவில் பேசியதாவது;

பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாட்டிலேயே முதன்மை மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-24 கீழ் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலைய விரிவாக்கத்தையும், ஆலம்பாடி சாலை சமத்துவபுரம் அருகில் மற்றும் கிரீன் சிட்டி பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில், 15வது மத்திய நிதிக்குழு மானியம் 2024-25 திட்டத்தின் கீழ் தலா ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற துணை சுகாதார நிலையங்களையும், பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ. 5.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தையும், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டாரத்திற்குட்பட்ட மேலப்புலியூரில், ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட கை.களத்தூர் ஊராட்சி பாதாங்கியில் வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரம் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் நேரடி நெல் கொள்முதல் கட்டிடத்தையும், பிம்பலூர் ஊராட்சி மரவநத்தம் முதல் பழைய மரவந்தம் வரை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டதையும், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரத்திற்குட்பட்ட கொளப்பாடி ஊராட்சியில், வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரம் திட்டத்தின் கீழ் ரூ.29.70 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும், வசிஷ்டபுரம் ஊராட்சி பள்ளக்காலிங்கராயநல்லூர் பகுதியில் வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரம் திட்டத்தின் கீழ் ரூ.48.79 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறுபாலத்தினையும், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட ஆதனூர் மற்றும் குரூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தலா ரூ.31.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களையும் என மொத்தம் ரூ.12,83,19,000 கோடி மதிப்பில் மொத்தம் 11 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

26 பயனாளிகளுக்கு ரூ.18.76 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாகளையும், 100 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 52 பயனாளிகளுக்கு ரூ.11.51 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித் தொகைக்கான ஆணைகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1.03 லட்சம் மதிப்பில் நுண்ணீர்ப்பாசனக் தொகுப்பையும், தொழிளாலர் நலன் மற்றம் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், 25 பயனாளிகளுக்கு ரூ.8.60 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் இயற்கை மரண உதவித் தொகைக்கான ஆணைகளையும், சமூகநீதித்துறை சார்பில், நரிக்குறவர் நல வாரியத்தின் மூலம் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரத்திற்கான இயற்கை மரண உதவித் தொகைக்கான ஆணைகளையும், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.2.61 லட்சம் மதிப்பில் தாய்மாமன் தங்க மோதிரத்தினையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், கூட்டுறவுத்துறை சார்பில் 4 மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு ரூ.68.2 லட்சம் மதிப்பில் மகளிர் சுயஉதவிக் குழுக் கடனுக்கான ஆணைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாய தொழில் நிதிக்கான ஆணையினையும் என மொத்தம் 254 பயனாளிகளுக்கு ரூ.1,21,46,000 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன் வரவேற்றார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஆர்.டி.ஓ அனிதா, நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி ஆணையாளர் லீனாசைமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!