Perambalur and intermittent rain in the surrounding areas: public happy

பெரம்பலூர் : அக்னி கத்திரி வெயில் முடிந்தும் அனல் காற்று மக்களை அவதிப்படச் செய்து வந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தால் உண்டாகும் வேர்வையால் அல்லல்பட்டு வந்தனர்.

ஆடு மாடு மேய்ப்பவர்கள் முதல் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் வரை வெப்பத்தை தணிக்க அல்லாடினர். இந்நிலையில் இன்று பிற்பகலுக்கு பிறகும் மாலை பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு கனமழை பொழிந்தது.

வறட்சியின் தாக்கத்தில் சிக்கிய மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக மழை பெய்தது. மேலும், கால்நடைகளும் பசும்தீவனம் இன்றி உலர் தீவனங்களையும், காய்ந்த சறுகு மற்றும் இலைகளையே உண்டு வருகின்றன. இம்மழையால் புல், பூண்டு உள்ளிட்ட தீவன வகைகள், மரங்கள் புத்துயிர் பெறும். வனம் வளம் பெறும்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!