Perambalur Anganwadi workers demonstrated in a variety of demands.
பெரம்பலூர்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 20.11.2017அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவித்து இருந்தனர். அதையொட்டி பெரம்பலூர் பாலக்கரை மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் என்.பானுமதி தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் பி.சக்தி, ஆர்.தையல்நாயகி, எ.தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ஆர்.ரத்தினமாலா, சிறப்புரையாற்றினார். மாவட்டசெயலாளர் கே.மணிமேகலை சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர். அழகர்சாமி, மற்றும் சிஐடியு நிர்வாகிகள் எ.கணேசன், பிமுத்துசாமி, பி.ரெங்கராஜ் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியமும் உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும் வழங்கிட வேண்டும், பென்சன் முறைப்படுத்தி வழங்க வேண்டும். 1.1.20116 முதல் ஊதியகுழு நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும், மே மாதம் கோடை விடுமுறை மற்றும் பறிக்கப்பட்ட சனிக்கிழமை விடுமுறையையும் வழங்க வேண்டும்.
அங்கன்வாடியில் குழந்தைகள் ஆதார்எண் இணைப்புக்கு நான்கு ரூபாய் கேட்கும் அரசானை எண் வழங்கவேண்டும், அறிக்கைகளை கணினி மயமாக்குவதற்கான செலவுத்தொகையினை பணியாளர்களிடமே கேட்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
மாவட்ட பொருளாளர் கொளஞ்சி நன்றி கூறினார்.