Perambalur: Applications can be made to operate mini buses on 2 new routes; Collector informs!

பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள் / குக்கிராமங்கள் / குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக சிற்றுந்து வாகனத்திற்கான புதிய விரிவான திட்டம் – 2024 (NEW COMPREHENIVE SCHEME – 2024) செயல்படுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிற்றுந்து இயக்க 2 புதிய வழித்தடம் கண்டறியப்பட்டு 03.11.2025 அன்று பெரம்பலூர் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கண்ணப்பாடி பிரிவு முதல் செட்டிக்குளம் சிவன் கோவில் வரையிலும் மற்றும் ரோவர் கல்லூரி தண்ணீர் பந்தல் முதல் செங்குணம் வரையிலும் என 2 வழித்தடத்தில் சிற்றுந்துகளை இயக்க விரும்புபவர்கள் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி 07.11.2025 – க்குள் பரிவாகன் இணையதளம் வாயிலாக கட்டணம் ரூ.1,500 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.100 என மொத்தம் ரூ.1600 செலுத்தி, பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் பெறப்படும் நிலையில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு, பொதுமக்கள் நேரடியாக பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497