Perambalur: Are there any problems in your ward? The municipality has invited the public and all parties to submit a petition at the ward sabha meeting! This is not a blind eye!!

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் நாளை 27ம் தேதி கீழ்கண்ட வார்டுகளின் பொதுமக்கள் அடிப்படை சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக வார்டு சபா சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன்படி 1வது வார்டு வடக்கு மாதவி ரோடு ரேஷன் கடை மாடியிலும், 3வது வார்டு ரோஸ் நகர் மாரியம்மன் அருகிலும், 6வது வார்டு நளபாகம் மினி ஹாலிலும், 9வது வார்டு மாரியம்மன் கோவில் அருகிலும், துறைமங்கலம் சமுதாய கூடத்திலும், 11வது வார்டு கே.கே. நகர் மாரியம்மன் கோவில் அருகிலும், 13வது வார்டு மேட்டு தெரு பகுதியி லும், 15வது வார்டு சமத்துவ புரம் சமுதாய கூடத்திலும், 16வது வார்டு அரணாரை சமு தாய கூடத்திலும் 19 வது சங்குப்பேட்டை சமுதாய கூடத்திலும், 21வது வார்டு ராகேஷ் மினி ஹாலிலும்,
தொடர்ந்து நாளை மறுநாள் 28ஆம் தேதி 2வது வார்டு வடக்கு மாதவி ரேஷன் கடை மாடியிலும், 4வது வார்டு சாய்பாபா கோவில் அருகிலும், 5வது ஹால்,7வது வார்டு இஷ்டா மினி ஹால், 5வது வார்டு நளபாகம் மினி ஹாலிலும், 8வது வார்டு ஐடிஐ துறைமங்கலம் நேசனல் ஐடிஐயிலும், 10 வது வார்டு ராஜேஸ்வரி திருமண மண்டபத்திலும், 12 வது வார்டு ராசி திருமண மண்டபத்திலும், 14வது வார்டு மவுலானா மேல்நிலைப்பள்ளியிலும், 17வது வார்டு அரணாரை நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் , 18வார்டு பெரிய தெற்கு தெரு ஐயப்பன் வார்டு வெங்கடேசபுரம் மாரி கோவில் அருகிலும், 20 வது மாரியம்மன் கோவில் அருகில் ஆகிய இடங்களில் பெரம்பலூர் நகராட்சி வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அடிப்படை சேவைகள் குறித்து வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு தங்களது பொது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) கண்ணன் தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497