perambalur at the registered office of the new program: Untrained employees freezing Logs: Civilians heavy Suffered

பெரம்பலூர் உள்ளிட்ட 9 இடங்களில் பத்திரப் பதிவு பரிசார்த்த முறையில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து சில நாட்காளாக ஆன் லைன் பதிவு முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பத்திரவுப் பதிவு அலுவலகங்களில் கொடுங்கல், வாங்கல் விற்பனை, தானம், திருமணம், உயில், ஒப்பந்தம், கிரைய ஆவணங்கள் பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில் பரிசார்த்த முறையில் புதிய மென்பொருளை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருவதால் பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், சார் பதிவாளர் உமா தேவி உள்ளிட்டவர்களுக்கு போதிய பயிற்சியின்மை காரணமாக மென்பொருளை (சாஃப்ட்வேர்) கையாளுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஓரிரு பத்திரங்களை பதிவு செய்ய 5 முதல் 6 மணி நேரமாகியதால், பதிவு செய்து கொள்ள வந்திருந்தவர்கள் மற்ற வேலை செய்ய முடியாமலும், உரிய காலத்தில் வீடுகள் சென்ற சேர முடியாத நிலை ஏற்பட்டது. இதை

திருச்சி மண்டல பத்திரப்புதவுத்துறை டி.ஐ.ஜி. நல்லசிவம் நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர், இரவு 8 மணிக்கு மேலும் மக்கள் காத்திருந்தால், தொழில்நுட்ப பொறியாளர்களின் உதவி கொண்டு அவர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர். ஆவண எழுத்தர்களும், காத்திருந்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எழுதிய ஆவணங்களை பதிவு செய்து கொடுத்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால், பொதுமக்கள் கடுமையாக அவதிபட்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!