Perambalur Auto Association has condemned the government administration who did not remove the petition to Aggressive
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட 3 பிளஸ் 1ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு 28.7.2017 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனலட்சுமி ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் டி.தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் டி.பிரபாகரன், பொருளாளர் எம்.செந்தில் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டததில், பழையபேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை பின்புறம் உள்ள திருநகர் பகுதி அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு இரண்டு ஆண்டுக்கு முன்னர் மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் எழுப்பி உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை,
மேலும், இதற்கு நகராட்சி நிர்வாகம், மின்வாரிய நிர்வாகம், வருவாய்த்துறை கண்டு கொள்ளாமல் துணை போய் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஐடியு நிர்வாகிகள் பி.முத்துசாமி, எஸ்.அகஸ்டின், எ.கணேசன், ஆர்.ராஜகுமாரன், கே.மணிமேகலை, பி.ரெங்கராஜ், சி.சண்முகம், பி.பிரகாஷ், எ.ரெங்கநாதன், எஸ்.மல்லீஸ்குமார் உள்பட ஏராளமான ஆட்டோ சங்க பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.