Perambalur Balamurugan temple in the Pooja festival starting
பெரம்பலூர்,மார்ச்.23- பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் 38-வது ஆண்டு பங்குனி உத்திர பெருந்திருவிழா நேற்று முன்தினம் இரவு அனுக்கை விக்னேஸ்வரபூஜை மற்றும் வாஸ்துசாந்தி பூஜையுடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து 28-ந்தேதி பாலமுருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், 30-ந்தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் நடக்கிறது. தேரோட்டத்தை ஒட்டி அன்றைய தினம் காலை தெப்பக்குளம் அருகே அய்யப்பசாமி கோவிலில் இருந்து காவடி புறப்பாடும், மாலை 3மணிக்கு சப்பரத்தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 31-ந்தேதிவரை தினமும் காலை 8மணிக்கு சிறப்பு அபிசேகமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபாலமுருகன் திருவீதி உலாவும் நடக்கிறது. 28-ந்தேதி மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது.
நிறைவு தினமான 31-ந்தேதி மஞ்சள் நீர், விடையாற்றி விழாவும், இரவு 7மணிக்கு தாளம் தர்ஷினியின் நாட்டிய நிகழ்ச்சியும், ஆன்மீக பேச்சாளர் சுகி.சிவம் நடுவராக பங்கேற்கும் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா? போராட்டமா? என்ற தலைப்பில் பட்டிமன்றநிகழ்ச்சியும் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து ஏப்.6-ந்தேதி பஞ்சாட்சர திருவிழா (திருத்தேர் எட்டாம் திருவிழா) நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் பெரம்பலூர் மக்கள் நற்பணி மன்றத்தினர், மேட்டுத் தெரு முருக பக்தர்கள் செய்து வருகின்றனர்.