Perambalur: basketball and Volley ball between districts level, schools matches won Trichy teams

basket-ball-winners-Trichy-campion-school-team-2016

basket-ball-winners-Trichy-campion-school-team-2016


volley-ball-winner-trichy-sm-school-team

volley-ball-winner-trichy-sm-school-team


பெரம்பலூரில் ரோவர் (தனியார்) பொறியியல் கல்லூரியில், மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான, வாலிபால், கூடைப்பந்து போட்டிகள் நேற்றும், இன்றும் நடந்தது. இதில், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை திருச்சி, கரூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 30 அணிகளாக கலந்து கொண்டு போட்டிகளில் மோதினர். இதில் கூடைப்பந்து போட்டியில் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் கேடயத்தை திருச்சி கேம்பியன் பள்ளியை சேர்ந்த மாணவர்களும், இரண்டாம் பரிசாக ரூ. 4 ஆயிரம் ரொக்கம், கேடயத்தை திருச்சி பாய்லர் பள்ளி மாணவர்களும் வென்றனர்.

கையுந்துப் போட்டியில், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் கேடயத்தை எஸ்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இரண்டாம் பரிசாக ரூ. 4 ஆயிரம் ரொக்கம் கேடயத்தை தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சேர்ந்த ரைஸ்சிட்டி அணியினரும் வென்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு ரோவர் சுழல் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.

கூடைபந்து போட்டியில் பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவர் பி. அணியினர் மூன்றாம் இடத்தையும் மூவாயிரம் ரொக்கம், மற்றும் சுழற்கோப்பையையும் , நான்காம் இடத்தை இதே பள்ளியை சேர்ந்த மாணவர் ஏ அணியினர் ரொக்கம் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் கேடயத்தையும் வென்றனர்.

கையுந்துப் போட்டியில் அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ அணியினர் மூன்றாம் இடத்தையும், மூவாயிரம் ரொக்கம், மற்றும் சுழற்கோப்பையையும் , நான்காம் இடத்தை பெரம்பலூர் மாவட்டம் சு. ஆடுதுறை பள்ளியை சேர்ந்த மாணவ அணியினர் ரொக்கம் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் கேடயத்தையும் வென்றனர்,

போட்டிகளில் வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு , ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ம. இராமசுப்பரமணியராஜா கையுந்திப் பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களைப் பாரட்டிப் பரிசுகளை வழங்கினர்.

உயர்கல்வி இயக்குநர் முனைவர் பாலமுருகன் தலைமையில் முதல்வர் முனைவர் கணேஷ்பாபு, முதல்வர் அல்லிராணி, பேராசிரியர் சுபாராஜ் மற்றும் துணை முதல்வர் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை உடற்கல்வி இயக்குநர்கள் புகழேந்தி, கண்ணன், வெற்றிவேல், அறிவழகன் கல்லூரி துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக மேலாளர் ஆனந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!