Perambalur book fair – setting the stage start-up work-pooja
பெரம்பலூர் மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் “பெரம்பலுhர; புத்தகத் திருவிழா” வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. அதே போல இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகம்;, தென்னிந்திய புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் இணைந்து நடத்தும் 7ஆவது “பெரம்பலூர் புத்தகத் திருவிழா” பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் 16.2.2018 முதல் 26.2.2018 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது.
இப்புத்தகத்திருவிழாவில் 100 அரங்குகள், 1கோடி புத்தகங்கள் இடம்பெறவுள்ளது. மேலும், 40 பதிப்பகங்களும், 20 வெளியீட்டாளர்களும் தங்களது புத்தகங்ளை இடம் பெறச் செய்யவுள்ளனர்.
இப்புத்தகத் திருவிழா நடைபெறவுள்ள பெரம்பலூர் நகராட்சி அலுவலக மைதானத்தில் அரங்குகள் மற்றும் மேடை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவடட திட்ட இயக்குநர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, மேடை மற்றும் அரங்குகள் அமைப்பதற்கான பணிகளை கால்கோள் எடுத்து வைத்து துவக்கி வைத்தார்.
புத்தகத்திருவிழாவில் அரங்குகள் 20,800 ச.அடி. பரப்பளவிலும், விழா மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் அரங்கம் 6,000 ச.அடி பரப்பளவிலும் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஸ்ரீராம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) பிரகாஷ், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம், பேராசிரியர் கவண் – அம்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.