Perambalur: 5 pound jewelry theft of a locked house
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகதமிழ்குமரன் (34). இவரது வீடு செட்டிகுளம் செல்லும் சாலை அருகே வயல் பகுதியில் உள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றவர் நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்பநாய், கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.