Perambalur: Camp for Uyarvukkupadi under the Naan Multhulvan scheme: Collector information!
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்களில் உயர்கல்வி படிப்பில் சேராத மாணவ, மாணவியர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குபடி முகாம் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக உயர்வுக்குபடி முகாம் 22.08.2025 ( வெள்ளிக் கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளில் நேரடிச் சேர்க்கை செய்யப்படும். மேலும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்வி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கல்வி கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் 2022-23, 2023-24 மற்றும் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுதாத மாணவர்கள் உயர்கல்வி படிப்பில் சேராத மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் ச.அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவத்துள்ளார்.