Perambalur: Chairman of Ramakrishna Educational Institutions, M. Sivasubramaniam, released the poster of Sardar@150 Unity Walk!

மத்திய அரசின் மை பாரத் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த நாள் விழாவையொட்டி சர்தார்@150 ஒற்றுமை அணிவகுப்பு குறித்த போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி பெரம்பலூரில், மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் மா. சிவசுப்ரமணியம் கலந்து கொண்டு சர்தார்@150 ஒற்றுமை அணிவகுப்பு குறித்த போஸ்டரை வெளியிட்ட அவர் பேசியதாவது:

இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் மூலம் நாடு முழுவதும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. சர்தார்@150 இந்நிகழ்ச்சிக்காக நாடு முழுவதும் பாதயாத்ரா நடைபெற உள்ளது. இக்கால இளைஞர்களுக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் இந்திய ஒருங்கிணைப்பிற்காக எவ்வாறு பாடுபட்டார் என்பதை தெளிவுபடுத்த இளைஞர்கள் மூலம் இப்பாதயாத்திரை நடைபெற உள்ளது. இது குறித்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் 2047 ஆண்டு விக்சித் பாரதத்தின் இலக்கை அடைய, நம் இந்திய இளைஞர்கள் வளர்ச்சி அடைந்த தன் நிறைவான நாட்டை உருவாக்க பாடுபட வேண்டும். இந்த கருத்துக்களை மனதில் கொண்டு மை பாரத் என்னும் இளையதளத்தில் கட்டுரைப் போட்டிகள் ஊடக ரீல் போட்டிகள், கட்டுரை, வினாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.

அக்டோபர் 31 முதல் நவம்பர் 25 வரை நாடு முழுவதும் பாதை யாத்திரைகள் நடைபெற உள்ளது. பெரம்பலூரில் வரும் 31ம்தேதி பாலக்கரை தொடங்கி ரோவர் ஆர்ச் வரையிலும், நவம்பர் 4ம்தேதி எளம்பலூர் தண்ணீர் பந்தல் ரோவர் கல்லூரியில் தொடங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மை கல்லூரி வரையிலும், பாதயாத்திரை நடைபெறுகிறது. இதில் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், உள்ளூர் தான்னார்வ அமைப்பினர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கை குறித்த போட்டிகள் மற்றும் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களின் சொற்பொழிவு நடைபெறவுள்ளது என தெரிவித்தார். பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆத்தீஸ்வரி, ராமகிருஷ்ணா மெட்ரிக் ஸ்கூல் பிரின்ஸ்பல் கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!