Perambalur: Chief Minister MK Stalin inaugurated the construction work of the Assistant Commissioner’s Office of the Hindu Religious Endowments Department worth Rs. 1.50 crore via video conferencing.
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள உழவர் சந்தையில், சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில், இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகம் கட்டுமான பணிகள் தொடக்க விழா இன்று காலை நடந்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பெரம்பலூரில் கலெக்டர் ந.மிருணாளினி, எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் பணிகளை தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் ஆ கலியபெருமாள், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், அறங்காவல் குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சண்முகம், கோகிலா, திருச்சி விமான ஆலோசனை குழு உறுப்பினர் டி ஆர் சிவசங்கர், அறநிலையத்துறை பணியாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் சுசீலா செந்தில், நல்லுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.