பெரம்பலூர் அருகே டூவீலர்இ மோதிய தகராறால் இரு தரபினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்குபலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பீல்வாடி கிராமத்தை சேர்ந்த அழகுதுரை (45). இவர் சென்னையில் ஒரு ஒட்டலில் பணிபுரிகிறார்.
இவரது மகன்கள் ஆனந்தராஜ் (24) தேவேந்திரன் (18) இருவரும் அதே கிராமத்தில் மூப்பனார் தெரு என்ற இடத்தில் தங்களது இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்றுள்ளனர் அப்போது வாகனத்தை ஆனந்தராஜ் ஒட்டியுள்ளார்.
அவர்கள் வேகமாக சென்றதாக கூறபடுகிறது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விஜய் (10) விக்னேஷ் (20) வினோத் (22) ஆகிய மூவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் விக்னேஷ் , வினோத், ஆகிய இருவர் மீது மோதியதாக கூறபடுகிறது.
இதில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது இதனால் இரு தரபினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது இதில் ஆனந்தராஜ் அருகில் இருந்த உருட்டு கட்டை எடுத்து விக்னேஷ் மற்றும் வினோத் ஆகிய இருவரையும் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஆனந்தராஜ் இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிபடையில் தலைமறைவான இருவரையும் கைது செய்து தேவேந்திரனை இளம் சிறார் நீதிமன்ற தலைவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறுவர் சிறையில் அடைத்தனர். ஆனந்தராஜ்யும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்