Perambalur: Collector helps a student who scored 70 percent marks in +2 but cannot continue his higher studies due to family poverty!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையை சேர்ந்த அக்ஷயக்குமார் என்ற மாணவனின் தந்தை மாவட்டத்தின் கலெக்டர் ச.அருண்ராஜ் இடம் அளித்த மனுவில், தனக்கு 2 சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், தனது மனைவி சில வருடங்களுக்கு முன் விபத்துக்குள்ளாகி வீட்டில் படுத்த படுக்கையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்த அவர், தனது மகனை 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து விட்டதாகவும், 70 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற தனது மகன் மைக்ரோபயாலஜி படிக்க விரும்புவதால், கல்லூரியில் சேர்க்க உதவிடும்படியும் கேட்டுக்கொண்டார்.

அவரின் மனுவை பரிசீலித்த கலெக்டர், ஒரு வாரத்திற்குள் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழத்தில் மைக்ரோபயாலஜி பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவன் அக்சயக் குமார் விரும்பிய பாடப்பிரிவில் பயில்வதற்கு ஏற்பாடு செய்திட கேட்டுக் கொண்டார். அதன்படி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் அம்மாணவனுக்கு கல்லூரி படிப்பு முடியும் வரை எந்தவித கட்டணமுமின்றி பயில்வதற்கான கல்லூரி சேர்க்கை ஆணையினை வழங்கினார்.

பயனடைந்த மாணவனும், அவரது தந்தையும் கலெக்டருக்குதங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர்கள் முனைவர். வெற்றிவேலன், செல்லப்பன், நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!