Perambalur: Collector helps differently-abled student in higher education!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் கலெக்டர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்க்குப்பை கிராமத்தை சேர்ந்த ராஜகுமாரி என்பவரின் மகன் சஞ்சய் என்பவர் 14.07.2025 அன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது உயர்கல்விக்கு உதவக் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தார்.

கண் பார்வையற்ற சூழலிலும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற மாணவன் சஞ்சயின் ஆர்வைத்தைப் பாராட்டிய கலெக்டர் நிச்சயம் உங்கள் உயர்கல்விக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். அதன்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சஞ்சய்க்கு ரோவர் கல்லூரியில் உயர்கல்வி பயில்வதற்காக இலவசமாக இடம் பெற்று தந்து அதற்கான ஆணையினை கலெக்டர் ச.அருண்ராஜ் வழங்கினார்.

மன நெகிழ்வோடு இந்த ஆணையினைப் பெற்றுக்கொண்ட கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவன் சஞ்சய் கண்ணீர் மல்க கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், எனது உடன்பிறந்த சகோதரன் மற்றும் சகோதரி என நாங்கள் மூவரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இந்நிலையில் எனது உயர்கல்விக்கு உதவிடவேண்டுமென்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த ஒரே வாரத்தில் எனக்கு இலவசமாக தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு தமிழ் பாடப்பிரிவில் படிப்பதற்கு இடம் பெற்று தந்தார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதும் என்னைப்போன்ற ஏழை எளிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது உயர்கல்விக்கனவை நிறைவேற்றிய கலெக்டர் அருண்ராஜுவிற்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துக்கொண்டார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!