Perambalur: Copper thieves are trying to shock the Electricity Board; If you see them, call them! Electricity Board appeals to the public!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் மின்வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர்களில் இருந்து, காப்பர் காயில் மற்றும் ஆயில் திருடப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசில் புகார் கொடுத்து அவர்களும் திருடர்களை சிறப்பு படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களாகிய தாங்கள் தங்களுடைய ஊரில் சந்தேகப்படும் படியான நபர்கள் அதாவது மின் வாரிய பணியாளர்களை போல் மின் கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் இரவு நேரங்களில் நடமாடுவதை கண்டால் உடனடியாக தங்கள் பகுதி மின் வாரிய அலுவலர்களுக்கு உடனே செல்போனில் தகவல் தெரியப்படுத்தவும். மேலும், தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் மின் தடை ஏதும் ஏற்பட்டால் உடனடியாக மின் வாரியத்திற்கு தெரியப்படுத்துமாறும், தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக இது தொடர்பாக பொதுமக்கள் செல்போன் மூலம் கீழ்க்கண்ட மின் வாரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உதவுமாறு மின்வாரிய அலுலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் செயற்பொறியாளர் 94458 53641, பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் 94458 53643, பெரம்பலூர் நகர் உதவி மின் பொறியாளர் 94458 53649. துறைமங்கலம் 94458 53663, பெரம்பலூர் தெற்கு 94458 53650, பெரம்பலூர் வடக்கு 94458 53651, பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் கிராமியம் 94458 53644,
அம்மாபாளையம் 94458 53655, எசனை 94458 53656, குரும்பலூர் 94458 53657, வேப்பந்தட்டை 94458 53658, நக்கசேலம் 94458 53659, உதவி செயற்பொறியாளர் சிறுவாச்சூர் 94458 53645, சிறுவாச்சூர் 94458 5661, செட்டிகுளம் 94458 53662, பாடலூர் 94458 53664, கொளக்காநத்தம் 94458 53665,
லப்பைகுடிக்காடு உதவி செயற்பொறியாளர் 94458 5646, லப்பைகுடிக்காடு 94458 5666, சின்னாறு அணை 94458 53667, வி களத்தூர் 94458 53668, வாலிகண்டபுரம் 94458 53652, கிருஷ்ணாபுரம் உதவி செயற்பொறியாளர் 94458 53647,
கிருஷ்ணாபுரம் வடக்கு 94458 53670, கிருஷ்ணாபுரம் கிராமியம் 94458 53671, அரும்பாவூர் 94458 53672, பூலாம்பாடி கிராமியம் 94458 53673, கைகளத்தூர் 94458 53674, குன்னம் உதவி செயற்பொறியளார் 94458 53648, வேப்பூர் 94458 53653, மருதையான் கோவில் 94458 53686, துங்கபுரம் 94458 53693 என்ற எண்களில் பொறியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497