Perambalur: Court orders building contractor to pay Rs. 4 lakh compensation to jewellery shop owner

பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளருக்கு சேவை குறைபாடு காரணமாக கட்டிட ஒப்பந்தக்காரர் ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.

பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச்சேர்ந்தவர் செல்வராசு.(51) இவர் கடைவீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
துறைமங்கலம் கட்டிட கட்முன நிறுவன உரிமையாளரும், ஒப்பந்தகாரருமான ராஜா, செல்வராசுக்கு சொந்தமான பழைய வீட்டை ரூ. 24 லட்சத்து, 75 ஆயிரம் செலவில் புதுப்பித்து கட்டுமான பணியை ஓராண்டில் நிறைவு செய்து அளிப்பது என இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். முன்பணமாக ஒரு லட்சம் அளிக்கப்பட்டது. மீத இந்த தொகை 9 தவணைகளாக ஒப்பந்த காரர் ராஜவிற்கு கட்டிட உரிமையாளர் செல்வராசு கொடுத்துள்ளார்.

ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு கட்டிட வரைபடத்தின்படி கட்டாமல் மாற்றி கட்டிகொடுத்தாகவும், தரையில் டைல்ஸ் பதிக்காமல் சிமெண்ட் தளம் பதித்து தந்துள்ளதாகவும், ரூ.3 லட்சத்து 50ஆயிரத்து 931 தொகையை ராஜா அதிகம் பெற்றுக்கொண்டாரம். இதனால் மனஉளைச்சல் அடைந்து பாதிக்கப்பட்ட செல்வராசு, கட்டிட ஒப்பந்ததாரர் ராஜா மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தனது வக்கீல் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை பெரம்பலூர் நுகர்வோர் கோர்ட் நீதிபதி ஜவஹர், மற்றும் உறுப்பினர்கள், திலகா மற்றும் முத்துகுமரன் விசாரணை செய்தனர். இதன் முடிவில் கட்டிட ஒப்பந்ததாரரின் சேவைகுறைபாடு காரணமாக மனுதாரருக்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தொகையும், ரூ.3 லட்சத்து 50ஆயிரத்து 931-யையும் வழக்கின் தீர்ப்பு கிடைக்கப்பெற்ற 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் ஒப்பந்தகாரர் ராஜா தொகையை வழங்கும் தேதி வரை 8 சதவீதம் ஆண்டுவட்டியுடன் சேர்த்து தொகை வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

இதேபோன்று செல்வராசு தனக்கு சொந்தமான காலிமனையில் மற்றொரு வீடு கட்டித்தருவதற்காக ராஜாவிடம் ஒப்பந்தம் போட்டிருந்தார். அதன்படி ரூ ஒரு லட்சத்து 50ஆயிரம் முன்தொகை கொடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து ரூ.17 லட்சத்து 75ஆயிரம் தொகையை 9 தவணைகளில் ராஜாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் ஒப்பந்தப்படி ராஜா செயல்படாமல் செல்வராசுவிடம் இருந்து ரூ. 2 லட்சத்து 81ஆயிரத்து 513-ஐ கூடுதலாக ராஜா வசூலித்துள்ளார். இதனால் மனஉளைச்சல் அடைந்த செல்வராசு, ஒப்பந்ததாரர் ராஜா மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தனது வக்கீல் மூலம் மனுதாக்கல் செய்து மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய பெரம்பலூர் நுகர்வோர் கோர்ட் நீதிபதி ஜவஹர் மற்றும் உறுப்பினர்கள் எதிர்மனுதாரர் ராஜா, செல்வராசுவிற்கு ரூ.2 லட்சத்து 81ஆயிரதது 513-யையும், செல்வராசுவை மனஉளைச்சலில் விட்டமைக்காக ரூ.2 லட்சமும் நிவாரணை தொகையையும், வழக்கின் தீர்ப்பு கிடைக்கப்பெற்ற 45 நாட்களுக்குள் வழங்கவேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தகாரர் ராஜா தொகையை வழங்கும் தேதிவரை 8 சதவீதம் ஆண்டுவட்டியுடன் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!