Perambalur: Court orders chariots to run on all streets in Veppanthattai!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் வேதமாரியம்மன் தேர் திருவிழா நடத்த கடந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர், ஆதி திராவிடர் தெருவிற்குள்ளும் வர வேண்டும் என்றும், வழிபாட்டு உரிமையை சட்டப்படி நிலை வேண்டும் என வலியுறுத்தியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வினோத்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார் .மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பாபா மோகன், சி.பிரபு க.அய்யம்பெருமாள் ப. சந்திரகுமார் உள்ளிட்டோர் வாதிட்டனர்.
இன்று வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தெருக்களிலும் தேர் செல்ல வேண்டும் அதற்கு உரிய பாதுகாப்பை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.