Perambalur Cyber Crime Police recover missing mobile phones and hand over lost money

பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், கடந்த பிப்.9 முதல் 30 ஸ்மார்ட் மொபைல் போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகார்களில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 20 ஸ்மார்ட் போன்களை கண்டுபிடித்தனர், அதோடு, கே.ஒய்.சி. அப்டேட் புகாரில் ரூ.50 ஆயிரம் இழந்தவருக்கு ரூ.48,200-ம், கிரிடிட் கார்டு மோசடியில் இரண்டு நபர்கள் ரூ.38,627 இழந்ததில் ரூ.8,000-ம், ஏ.டி.எம் கார்டு மோசடியில் ரூ.30,000 இழந்ததில் ரூ.17,000-ம், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஒரு நபர் ரூ.18,540 இழந்ததில் ரூ. 18,540-யும், ஓ.டி.பி பிராடு மோசடியில் ரூ.42,469 இழந்ததில் ரூ. 22,000-த்தையும், ஆன்லைன் விளையாட்டு மோசடியில் ரூ.30,000 இழந்ததவருக்கு ரூ. 10,000-யும், முதலீடு சம்மந்தமான மோசடியில் ரூ.30,300 இழந்ததில் ரூ. 10,000-ம் என மொத்த தொகை ரூ.1,25,540-த்தை மீட்டு பாதிக்கப்பட்ட உரிய நபர்களிடம் போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி. மணி தலைமையில் ஒப்படைத்தனர். , பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி சுப்ரமணி உள்ளிட்ட சைபர் க்ரைம் எஸ்.ஐ மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இணையவழி மோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “1930” என்ற இலவச அழைப்பு எண்ணிலும், சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!